Showing posts with label tamilposts. Show all posts
Showing posts with label tamilposts. Show all posts

பசு

பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு முதன்
முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.

பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.

ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்குத் தேவை.

அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறுநீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளி யேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.

மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மை யானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..

பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.

உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச்சாதனை செய்த மாட்டின் பெயர் 'உர்பே' ஆகும்.

இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.

குட்டிக்கதை

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!

ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!

குட்டிக்கதை

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில்
வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்
.

ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர்.

நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்
கொண்டான்.

அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான். பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி
எழுதினான்.

இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு
என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லி கேட்டான்.

அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு
யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது" என்று சொன்னான்.

கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும்
இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குட்டி கதை 1

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

"நட்புக் கவிதைகள்"

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல ,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல !

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
‘ வெறுப்படிக்கிதுடா மச்சான் ‘ னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,

வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,
இல்ல ‘ மனிஸ் ‘ தியேட்டர்ல படம் பாக்க !

‘ கஷ்டப்பட்டு ‘ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான் .. .
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !

கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல ,
எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா
H.O.D ய கூட விட்டதில்ல !

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம் …
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல .. .
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல ,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல !

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல .. .
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல !

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘ வெட்டி ஆபிஸர் ‘ னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் .. .

பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘ சாப்பாட்ல காரம்டா மச்சான் ‘ னு
சமாளிச்சி எழுந்து போவோம் .. .

நாட்கள் நகர ,
வருஷங்கள் ஓடுது ,
எப்போதாவது மட்டுந்தான் இ - மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு .. .

தங்கச்சி கல்யாணம் ,
தம்பி காலேஜி ,
அக்காவோட சீமந்தம் ,
அம்மாவோட ஆஸ்த்துமா ,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல் ,
appraisal டென்ஷன் ,

இந்த கொடுமையெல்லாம் பத்தா
‘ இன்னிக்காவது பேச மாட்டாளா ?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !
இ - மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க !
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ ஏண்டா பேசல ?’ ன்னு கோச்சிக்க தெரியல . .

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது !
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது !

வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது !
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘ மாமா ‘ ‘ மச்சான் ‘ மாறாது !


நன்றி  

சில இனிய தகவல்கள் :)

சில இனிய தகவல்கள் :)
----------------------------------------
நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது.

********

மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும். அதற்கு Dutch courage என்று பெயர்.

********
இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப் படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர். இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது.

********
உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி.

********
நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது.

********
ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம்.

**********
கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில் 'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்கு 'ஆஸ்பெட்டாஸ்'என்ற பெயர் வந்தது. கிரேக்க மொழியில் ஆஸ்பெட்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று பொருள்.

********
மத்தாப்பு மற்றும் வான வெடிகளில் வித விதமான வர்ணங்கள் தோன்ற வெடி மருந்துடன் பல்வேறு உலோக உப்புகளைச் சேர்க்கிறார்கள்.
நீலம்-- காப்பர்
பச்சை--பேரியம்.
மஞ்சள்--சோடியம்.
சிவப்பு--ஸ்ட்ரோண்டியம்.

********
55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி. இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி செல்வது 110அடி. எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி 55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.

அம்மாவைப் பற்றிய ஆவணக்குறிப்புகள்!



ற்றங்கரையில்
வெறிக்கும்
அந்தச் சிறுமியிடம்
ஒரு கேள்வியிருக்கிறது…
அமைதியாய் நகரும்
ஆற்றுநீரில்
நேர்த்தியாய் வெடிக்கும்
நீர்க் குமிழிகளில்
ஆற்றோடு போன அம்மாவின்
மூச்சுக்குமிழி எதுவென?
-
டிபட்ட அம்மாவுக்கு
அறுவை சிகிச்சை,
இரத்தம் கேக்குறாங்க எனக்
கை பிசையும்
கிராமத்து நண்பனின்
முகத்திலும் ரத்தம்
ஒரு சொட்டுக்கூட இல்லை
~
பிதுங்கி வழியும் பேருந்தில்
மூச்சுக்காற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் தருணத்தில்
கடக்கும் நிறுத்தத்தில்
கையேந்திக்கொண்டிருக்கும்
முக்காடிட்ட நூல் புடவைக்கிழவி
அம்மாவைப் பிரித்துவிட்டவனுக்கு
அம்மாவை நினைவுப் பிச்சையிடுகிறாள்
-

கல்கி (08.07.2012) இதழில் வெளிவந்த கவிதை.
நன்றி : கல்கி

வேப்பமரம்



வேப்பமரம் (வேம்பு) இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தற்போது உலகின் தென் கிழக்கு ஆசியா, அந்தமான், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் வெப்பப்பகுதி மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது வளர்க்கப்படுகிறது. இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வளர்கின்றன. இம்மரம் களிமண், கரிசல் மண் நிலங்களில் வளர்ந்தாலும் மண் ஆழமில்லாத நிலங்கள், சரளை நிலங்கள் மற்றும் உவர் நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. களர் நிலங்களிலும் வளரும். ஆனால், நீர் தேங்கி நிற்கும் பகுதி மற்றும் பனிப்பிரதேசத்தில் சரியாக வளர்வதில்லை.
      வேப்ப மரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். வறட்சி பகுதிகளில் இலைகள் உதிர்ந்து கோடைக்காலத்தில் புதிய தளிர்களுடன் காட்சியளிக்கும். இது 40- 50 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு பெரிய மரமாகும். இதன் அடிமரம் நேராகவும், பருத்தும் இருப்பதுடன் குடை போன்ற கிளை மற்றும் உச்சி அமைப்பைக் கொண்டது. இது ஆழமான வேர் அமைப்பைக் கொண்டதால் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் சிறப்பியல்பைக் கொண்டது. மேலும் இது வெட்ட வெட்ட தழைக்கும் தன்மைக் கொண்டதால் சமூக நலக்காடு வளர்ப்புத் திட்டத்தில் இதனைப் பெருவாரியாக பயன்படுத்தி பலனடையலாம்.
      வேம்பு, வீடு கட்டுமான பொருட்களும், கலப்பை போன்ற விவசாய கருவிகளுக்கும், இருக்கைகள் செய்வதற்கும், பலகைகள் செய்யவும் உதவுகிறது. மர வேலைப்பாடுகளுக்கும் ஏற்றது.
      வறட்சிப் பகுதிகளில் கால்நடைகளுக்கு இது ஒரு சிறந்த பசுந்தீவனமாக பயன்படுகிறது. 25 உயரமுள்ள ஒரு நடுத்தர மரம் ஆண்டுக்கு 350 கிலோ அளவிற்கு இலைகளைக் கொடுக்க வல்லது. இலையில் புரதச் சத்தும், தாது உப்புக்களும் மருத்துவப் பொருட்களும் உள்ளது. சிறந்த பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. இதனுடைய இலைகள் காற்றை சுத்திகரிக்கவும், சத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கோடையில் நல்ல சுகாதாரமான நிழலைத் தரவும் உதவுகிறது. இது ஜனவரி முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும். இடத்திற்கு இடம் பூக்கும் பருவம் மாறுபடலாம்.
      ஒரு மரத்திலிருந்து 3.7 முதல் 55 கிலோ பழமும், அவற்றிலிருந்து 40 சதவீத அளவிற்கு விதையும் (கொட்டை) அக்கொட்டையிலிருந்து 45 சதவீத அளவில் எண்ணையும் கிடைக்கும். எண்ணை எடுத்தபின் பிண்ணாக்கு கிடைக்கிறது. இது சிறந்த உரமாக பயன்படுகிறது. வேப்ப எண்ணெய் சோப்பு தயாரிக்கவும் அதனை சுத்திகரித்து மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. எனவே, இது ஒரு சிறந்த பலன் தரக்கூடிய அரும்பெரும் மரமாகும். வேப்ப விதைகளின் முளைப்பு திறன் 2 முதல் 3 வாரங்களுக்குத்தான் இருக்கும். அதன் பின் சரியாக முளைப்பதில்லை. விதைகளைச் சேகரித்தவுடன் விதைத்துவிட வேண்டும்.
      வளர்ந்த நாற்றுகளை நட்ட 6 - 7 ஆண்டுகளில் பூத்து காய்க்க ஆரம்பித்து விடும். 10 வது ஆண்டிலிருந்து அதிக அளவில் சீரான மகசூல் பெற முடியும். சராசரியாக ஒரு மரத்திலிருந்து 50 கிலோ அளவில் பழமும் 20 கிலோ விதையும் கிடைக்கும். எவ்வளவு கடுமையான வறட்சியினாலும் எங்கும் பச்சையைப் பார்க்க முடியாத நிலையிலும் இம்மரம் பசுமையாக நின்று நல்ல நிழலும், பசுந்தீவனமும் தருவதுடன் ஒரு மரத்திலிருந்து சுமாராக 20 கிலோ விதையினையும் தரவல்லது.

Types of lands in Tamilnadu

ஐவகை நிலங்கள்


  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை

 குறிஞ்சி


தமிழகத்தில் நிலத்தை ஐவகையாக பிரித்து வழங்கி வந்தனர். இதில் முதலாவதாக வருவது குறிஞ்சி ஆகும். இங்கு குறிஞ்சி என அழைக்கப்படுவது மலையும் மலை