அம்மாவைப் பற்றிய ஆவணக்குறிப்புகள்!



ற்றங்கரையில்
வெறிக்கும்
அந்தச் சிறுமியிடம்
ஒரு கேள்வியிருக்கிறது…
அமைதியாய் நகரும்
ஆற்றுநீரில்
நேர்த்தியாய் வெடிக்கும்
நீர்க் குமிழிகளில்
ஆற்றோடு போன அம்மாவின்
மூச்சுக்குமிழி எதுவென?
-
டிபட்ட அம்மாவுக்கு
அறுவை சிகிச்சை,
இரத்தம் கேக்குறாங்க எனக்
கை பிசையும்
கிராமத்து நண்பனின்
முகத்திலும் ரத்தம்
ஒரு சொட்டுக்கூட இல்லை
~
பிதுங்கி வழியும் பேருந்தில்
மூச்சுக்காற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் தருணத்தில்
கடக்கும் நிறுத்தத்தில்
கையேந்திக்கொண்டிருக்கும்
முக்காடிட்ட நூல் புடவைக்கிழவி
அம்மாவைப் பிரித்துவிட்டவனுக்கு
அம்மாவை நினைவுப் பிச்சையிடுகிறாள்
-

கல்கி (08.07.2012) இதழில் வெளிவந்த கவிதை.
நன்றி : கல்கி