ஆல்பர்ட், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா ஹென்றிக்கு அலுத்துவிட்டது. “எதுக்குடா இப்பிடி அடைஞ்சுகிடக்கறே. வெளிய போலாம் வாடா’’ என்று பல முறை சொல்லிவிட்டார். ‘‘இதோ போலாம்ப்பா... ஒரு அஞ்சு நிமிஷம்ப்பா... ம்... சரிப்பா” என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்கிறானே தவிர, இடத்தை விட்டு அசையவில்லை. தொலைக்காட்சியை விட்டு பார்வையை எடுக்கவில்லை. ஆல்பர்ட்டுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டன. அவனது அப்பா, மாதத்தில் 20 நாட்களாவது அலுவலக வேலையாக வெளி மாநிலங்களில் இருப்பார். மீதி 10 நாட்களில் உள்ளூர்...